தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா
வெம்பாக்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது.;
செய்யாறு
வெம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெம்பாக்கம் வட்டார கிளையின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
வட்டார தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், செய்யாறு கல்வி மாவட்ட செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் எம்.ஜி.சிவா வரவேற்றார்.
இதில் மாநிலத் தலைவர் மணிமேகலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் ரஞ்சன் தயாளதாஸ், அலோசியஸ் துரைராஜ், மாநில செயலாளர் டேவிட்ராஜன், முன்னாள் மாநில பொருளாளர் ஜோதி பாபு, மாவட்ட தலைவர் சத்தியபாமா, மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடபதி, மாநில செயற்குழு உறுப்பினர் கங்காதரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.