மரங்கள் தீயில் எரிந்து நாசம்

மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.;

Update: 2023-02-24 18:46 GMT

நாணப்பரப்பு அருகே கணபதிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). விவசாயி. இவரது தோட்டத்தில் விவசாயம் செய்யாததால் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகள் முளைத்து இருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று நேற்று காய்ந்த செடி, கொடிகள் மற்றும் மரங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் மரங்கள், செடி, கொடிகள் தீயில் எரிந்து நாசமானது.

Tags:    

மேலும் செய்திகள்