சென்னையில் டெங்கு பாதிக்கப்பட்ட 75 பேருக்கு சிகிச்சை - மேயர் பிரியா தகவல்

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

Update: 2023-10-01 09:43 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை, லூப் சாலை, சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சென்னையில் ஒரு மண்டலத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 45 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுப்புழுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆவதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்