சதுரங்க போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் சாதனை

சதுரங்க போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.;

Update: 2022-11-30 18:45 GMT

செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சமேரியா மேவிஸ் தென்காசி மாவட்ட பொதிகை செஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் பாவூர்சத்திரத்தில் நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டார். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவர் சமேரியா மேவிஸ் 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்