போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சந்திரசேகரன், மண்டல பொருளாளர் பாஸ்கரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கபாண்டியன் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து சம்மேளன மாநில செயலாளர் கோபிநாதன் வரவேற்றார். புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை தேர்வு செய்யாமல் சிறப்பு பஸ்களை ஓட்டக்கூடாது. பொய்யான வாட்ஸ் அப், முகவரி இல்லா தொலைபேசி புகார்களை வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க கூடாது. மிகை பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு ரூ.750 வழங்க வேண்டும். தேர்வு செய்தபடி பரிசோதகர்களை நியமனம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் குடும்ப நிலையை அறிந்து தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.