போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-29 18:45 GMT


நாகை போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணை தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தர்.. சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி மணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் பேசினர்.மண்டல செயலாளர் ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்