பழனி முருகன் கோவில் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படை தன்மை

பழனி முருகன் கோவில் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-05-11 19:10 GMT


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் இடஒதுக்கீடு சம்பந்தமான எந்த விவரமும் இடம் பெறவில்லை. இது ஏற்புடையதல்ல. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்ேபாது நீதிபதிகள், இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுதாரர் தனக்கு வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அறிவிப்பாணையால் பாதிக்கப்படவில்லை. இதனால் அறிவிப்பாைணக்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களோ, அவர்களின் குடும்பத்தினர்களோ கோவிலுக்கு எதிராக புகார் அளித்து இருக்கக்கூடாது. வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது என்ற நிபந்தனை ஏற்புடையதல்ல என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், பழனி முருகன் கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்