சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது

சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது;

Update: 2023-05-21 19:45 GMT

கோவை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னியம்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த 20-ந் தேதி கோவைக்கு தொழில் நிமித்தமாக உதிரிபாகங்கள் வாங்க வந்தார். அவர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த திருநங்கை ஒருவர் ஆசீர்வாதம் செய்வது போல் பாவனை காட்டி சிறுவனிடம் இருந்த ரூ.1,300-ஐ பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து திருநங்கையை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் பறித்தது திருநங்கை கண்ணன் என்ற ரோஸ்மா ஜாஸ்மின்(வயது 24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்