குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய வழக்கை 'சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது ஏமாற்று வேலை' சீமான் குற்றச்சாட்டு

குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய வழக்கை ‘சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது ஏமாற்று வேலை’ சீமான் குற்றச்சாட்டு.

Update: 2023-01-25 20:38 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை பார்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தது ஒரு தேசிய அவமானமாக கருதுகிறேன். சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் சமூகமே இதை செய்திருந்ததாக குற்றம் சுமத்துகின்றனர். அப்படி செய்திருந்தால் அவர்களை கண்டறிந்து கைது செய்து காட்ட வேண்டும்.

வெளிப்படையான குற்றத்திற்கு விசாரணை எதற்கு? ஒரு குற்றவாளியை கண்டுபிடிப்பது மிகப்பெரிய வேலையா?. சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றினால் அது ஏமாற்றுவதற்கு சமம். காலம் கடத்தி இந்த பிரச்சினையை ஆற வைத்து இந்த பிரச்சினையை முடிப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையே வழக்கை மறைப்பதற்கு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்