திருச்சி மாநகரில் 2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி மாநகரில் 2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்;

Update: 2022-08-16 19:03 GMT

திருச்சி மாநகரத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜா உறையூர் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். நுண்ணறிவு பிரிவில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெரியசாமி தற்போது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்