18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்ெபக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-17 10:37 GMT

திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்ெபக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்விவரம் வருமாறு:-

இடமாற்றம்

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்த புனிதா திருவண்ணாமலை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்படுகிறார்.

இதேபோல் செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்த கலையரசி ராணிப்பேட்டை தீவிர குற்ற பிரிவுக்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கபிரிவில் பணியாற்றி வந்த கிருஷ்ணவேணி வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவுக்கும், திருவண்ணாமலையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ராமசந்திரன் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், திருவண்ணாமலை நிலஅபகரிப்பு பிரிவில் பணியாற்றி வந்த முரளிதரன் போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கவிதா செய்யாறு மதுவிலக்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள முரளிதரன் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் பணியாற்றி வந்த தனலட்சுமி செங்கம் மதுவிலக்குஅமலாக்கப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டி.ஐ.ஜி. உத்தரவு

அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த லதா அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், சேத்துப்பட்டில் பணியாற்றி வந்த பிரபாவதி போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை தீவிர குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த தீபா வேலூர் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், வேலூரில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த பேபி திருவண்ணாமலை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த கவிதா பாகாயத்துக்கும், திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வந்த பாரதி சோளிங்கருக்கும், சோளிங்கரில் பணியாற்றி வந்த முருகானந்தம் திருவண்ணாமலை சைபர்கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த நிர்மலா திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சியாமளா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழரசி சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்