கோவில்பட்டியில் பனிமூட்டம்நிலவியதால் ரெயில்கள் தாமதம்

கோவில்பட்டியில் புதன்கிழமை பனிமூட்டம்நிலவியதால் ரெயில்கள் தாமதமாக வந்தன.

Update: 2022-12-07 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிர் வாட்டி வதைத்தது. நேற்று அதிகாலை முதல் கடும் குளிருடன் பனிமூட்டமாக இருந்தது. இதனால் ரோடுகளில் வாகனங்கள், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு மெதுவாக சென்றனர். இதே போன்று ரெயில்களும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு தண்டவாளத்தில் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் நேற்று கோவில்பட்டிக்கு வந்த அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்து, புறப்பட்டு சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்