பயிர் சேதங்களை கணக்கெடுப்பது குறித்து பயிற்சி

காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் சேதங்களை கணக்கெடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2023-07-19 22:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கோட்ட பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் புத்தாக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி, உணவு பயிர்கள், காப்பீட்டு திட்டத்தில் எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து பயிற்சி அளித்தார். இதில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் பாலாஜி, விஜய சங்கவி, கோகிலபிரியா, உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் மற்றும் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர், உதவி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுபயிர் மதிப்பீடு ஆய்வு திட்டம் மற்றும் பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டங்களில் பயிர்களை எவ்வாறு கணக்கெடுப்பது குறித்து தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பொது பயிர் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் சோளம், நெல், ராகி, கம்பு, உள்ளிட்ட உணவு பயிர்களை சாகுபடி செய்யும் கிராமங்களை தேர்வு செய்து உணவு உற்பத்தி குறித்து கணக்கெடுக்கப்படும். உணவு உற்பத்தி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். கணக்கெடுப்பு விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை வைத்து உற்பத்தி குறைந்து இருந்தால், அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மழை போன்ற இயற்கை பேரிடர் மற்றும் நோய் தாக்குதல் போன்றவற்றின் மூலம் மகசூல் குறைந்து உள்ளதா? என்று கணக்கெடுக்கப்படும். இந்த விவரங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்