அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.;
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய இப்பயிற்சி முகாமில் கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி வரவேற்றார். கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா ஆகியோர் ஆசிஉரை வழங்கினர். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர்கள் ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் இயற்பியல் பாடத்தை பள்ளி மாணவர்களிடம் எவ்வாறு எளிதாக புரிய வைப்பது என்பதை பற்றி விளக்கினர். ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் கலைவாணி மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் கணினி பயன்பாடு குறித்து பேசினர். இதில், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் முதல்வரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சிவசங்கரி ரம்யா நன்றி கூறினார்.