'இ-நாம்' திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
விருதுநகர் விற்பனை குழு சார்பில் இ-நாம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
விருதுநகர் விற்பனை குழு சார்பில் இ-நாம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பயிற்சி
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விற்பனை குழுவில் செயல்படும் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேசிய வேளாண் சந்தை இ-நாம் திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டரின் அறிவுரைப்படி அனைத்து இ-நாம் சந்தைகளின் செயலாக்கம் பற்றி பயிற்சி அளித்திடும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள் உதவியுடன் இ-நாம் திட்ட பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 11 தாலுகாக்களை சேர்ந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் தோட்டக்கலை துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பண பரிவர்த்தனை
பயிற்சியில் இ-நாம் திட்டத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பதிவு விவரம், இ-நாம் திட்ட செயல்பாடுகள், பண்ணை வாயில், வர்த்தகம், விளைபொருட்களை தரப் பகுப்பாய்வு செய்தல், எடை மற்றும் கொள்முதல் ரசீது, பண பரிவர்த்தனை, மின்னணு ஏலம் ஆகியவை குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியினை விற்பனை கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், இ-நாம் திட்ட பணியாளர், ஆகியோர் வழங்கினார்கள். மேற்கண்ட பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் தலைமையில் நடைபெற்றது.