விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்

விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது

Update: 2023-10-08 18:45 GMT

திருப்பத்தூர்

அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்ட பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆத்திரம்பட்டி, கண்டவராயன்பட்டி, மணல்மேல்பட்டி, வஞ்சினிபட்டி, கொன்னத்தான்பட்டி, திருக்களாப்பட்டி, ஆலம்பட்டி, நெடுமறம் ஆகிய பஞ்சாயத்துகளில் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து, மானிய விலையில் இடுபொருட்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் வழங்கினார். திருப்பத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்நாதன் வரவேற்றார். ஆத்திரம்பட்டி ஊராட்சி தலைவர் நல்லகுமார் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ரேகா, வேளாண் அறிவியல் நிலையம் உதவி பேராசிரியர் விமலேந்திரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாஞ்சாலி, திம்மிராஜ், சிவகங்கை மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஆர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், ரத்தினகாந்தி, காஜாமுகைதீன் உள்ளிட்டோர் பேசினர். இதையொட்டி மண்மாதிரி சேகரித்தல், சிறுதானிய தொழில்நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், உழவர் பயிற்சி மையம் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்