கடலூர் அருகே நில அளவையர்களுக்கு பயிற்சி - கலெக்டர் ஆய்வு
கடலூர் அருகே நில அளவையர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை கலெக்டர் ஆய்வு செய்தாா்
நெல்லிக்குப்பம்,
கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 99 நில அளைவயர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவை பயிற்சி கடலூர் அருகே கிருஷ்ணசாமி கல்லூரியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பயிற்சி முடித்து பணியில் ஈடுபட உள்ள நீங்கள் அனைவரும் மக்கள் பணியை மிக முக்கியமாக கருதி பணிபுரிய வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மிக தெளிவாக சரியான முறையில் பயிற்சி பெற வேண்டும். இந்த கற்றல் பயிற்சி நீங்கள் பணியை சரியாக செய்வதற்கு ஏதுவாக அமையும் என்றார்.
அப்போது உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கோட்ட ஆய்வாளர்கள் நாராயணன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.