செம்பராம்பட்டில் விவசாயிகளுக்கு பயிற்சி

செம்பராம்பட்டில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update:2022-12-09 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், உதவி விதை அலுவலர் முருகேசன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் வல்லரசு, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் வரவேற்றார். இதில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் தாக்குதல், கண்காணித்தல் மற்றும் உரம் பயன்பாடு, அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்