விவசாயிகளுக்கு பயிற்சி

பொட்டல் கிராமத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-06-07 19:26 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், பொட்டல் கிராமத்தில் கிசான் கோஸ்தீஸ் மேளா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் சுபசெல்வி தலைமை தாங்கி, சிறுதானியத்தின் முக்கியத்துவங்கள், உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார். சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதைகுமார், பொட்டல் பஞ்சாயத்து தலைவர் மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்.

சிறுதானியங்கள், வண்டல் மண், உழவன் செயலி, உயிர் உரங்கள் போன்றவற்றின் முக்கியவத்துவம் குறித்த தொழில்நுட்ப பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகள் பேரணியாக சென்றனர். இப்பேரணியை யூனியன் தலைவர் பூங்கோதைகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண்மை அலுவலர் மணி தொழில்நுட்ப உரையாற்றினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்