விவசாயிகளுக்கு பயிற்சி
முதுகுளத்தூரில் மானாவாரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் தொடர்பான விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கமலா முன்னிலையில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாஸ்கரன் மணியன் தலைமையில் பயிற்சி நடைபெற்றது.
முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் அனைவரையும் வரவேற்றார். உடல் நலம் போன்று மண்ணின் வளத்தையும் விவசாயிகள் பேணுவதற்கு மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் உரங்கள் இடவேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) நாகராஜன் தெரிவித்தார். இதில் துணை வேளாண்மை அலுவலர் தனத்துைர, கலைஞர் திட்ட பொறுப்பு அலுவலர் ராமமூர்த்தி ஆகிேயார் பேசினார்கள். விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், உயிர் உரங்கள், உளுந்து விதைகள் வழங்கப்பட்டன. பயிற்சியில் செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த 40 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர்கள் முனியசாமி, மெய்விழி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.