விவசாயிகளுக்கு பயிற்சி
கமுதி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
கமுதி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில், தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனம், யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கு அசோஸ்பைரில்லம் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. தொண்டு நிறுவன மேனேஜிங் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் முன்னிலை வகித்தார். பயிற்றுனர்கள் ராஜாராம், வேல்மணிராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் அசோஸ்பைரில்லம் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனமாகவும், அனைத்து பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.