விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது;

Update:2022-09-02 03:40 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன் வழிகாட்டுதலின்படி, வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ், வேளாண்மை- உழவர் நலத்துறை மூலம் முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் குறித்து கரையாளனூரில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மை சார்ந்த மானிய திட்டங்கள், பி.எம். கிசான் திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

முன்னோடி விவசாயி ஆறுமுகம் மானாவாரி வேளாண்மையில் கோடை உழவு, விதை நேர்த்தி முறைகள், பயிர் ரக தேர்வு குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி, சூடோமோனாஸ் உயிர் பூஞ்சான கொல்லி குறித்து கூறி, அதனை உளுந்து விதையில் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகணேஷ், விவசாயி வேல்துரை ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்