ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை- உழவர் நலத்துறை மூலம் முதல்-அமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம் தொடர்பான விவசாயிகள் பயிற்சி கங்கணங்கிணறு கிராமத்தில் நடந்தது. ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன் தலைமை தாங்கி, மானாவாரி வேளாண்மையில் கோடை உழவு குறித்து பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். துணை வேளாண்மை அலுவலர் முருகன், வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து பேசினர். பஞ்சாயத்து தலைவர் கண்ணையா வாழ்த்தி பேசினார். பயிற்சியின் நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி, சூமேடாமோனாஸ் உயிர் பூஞ்சாண கொல்லி குறித்து பேசினார். பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் சுமன், மணிகண்டன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகணேஷ் மற்றும் ரெபேக்காள் கிருபாவதி ஆகியோர் செய்திருந்தனர்.