விவசாயிகளுக்கு பயிற்சி

தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.;

Update: 2023-09-17 18:49 GMT

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின் லதா ஆலோசனையில் நடைபெற்றது. ராதாபுரம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றார். துணை வேளாண்மை அலுவலர் இளங்கோ தலைமை தாங்கினார். முன்னோடி இயற்கை விவசாயி சுந்தரம் இயற்கை விவசாயம் பற்றி விளக்கி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் லட்சுமணன், விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை பெறுவது பற்றி விளக்கி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சசிகலா, உதவி தொழில் நுட்பமேலாளர்கள் சரிகா, சுபா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்