சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி வட்டார வேளாண்மைத்துறையின் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாற்றுப்பயிர் சாகுபடியான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வரவேற்று, வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குனர் சுபசெல்வி தலைமை தாங்கி சிறுதானியப் பயிர்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார் கேழ்வரகு சாகுபடி குறித்து தொழில்நுட்ப பயிற்சி அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.