மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவங்களை பயோமெட்ரிக் கருவிகள் மூலம் ஆன்லைனில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 61 ரேஷன் கடைகளுக்கு, 500 குடும்ப அட்டைகளுக்கு ஒருவர் வீதம் 85 இல்லம் தேடிக்கல்வி திட்ட ஆசிரியைகளுக்கு நாகை மாவட்ட நிர்வாகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். பயிற்சியில் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், நாகை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.