விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய முனைவர் வேணுதேவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இயற்கை விவசாயம் செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இயற்கை முறையில் விளைவித்த விளை பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மற்றும் உணவு தயாரிக்கும் தொழிலுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. சிறு தானிய பயிர்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது விவசாயிகள் ஒருங்கிணைந்து குழுக்களாக விற்பனை செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்றார். இதில் முத்தாண்டியாபுரம், கண்டியாபுரம், லட்சுமிபுரம், வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம், பாறைப்பட்டி, ஊத்துப்பட்டி, கங்கர் சேவல், இனாம் ரெட்டியாபட்டி, உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.