கிருஷ்ணகிரியில் தி.மு.க. பயிற்சி பாசறை
கிருஷ்ணகிரியில் தி.மு.க. பயிற்சி பாசறை நடைபெற்றது.;
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர்-99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் காஞ்சனா கமலநாதன், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் மதியழகன் எம்.எல்.ஏ., விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், தொழிலதிபர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.
இதில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், கலைஞரின் மொழிக்கொள்கை என்ற தலைப்பிலும், தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, தி.மு.க.வின் மாநில சுயாட்சி என்ற தலைப்பிலும் பேசினார்கள். திராவிட இயக்க தமிழ் பேரவை பொது செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்று, கலைஞரின் சமூக நீதிப்போர் என்ற தலைப்பில் பேசினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.