மாணவர்களை மேம்படுத்தும் பயிற்சி முகாம்
கடையநல்லூர் பள்ளியில் மாணவர்களை மேம்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை மேம்படுத்தும் பயிற்சி மற்றும் வாய் மற்றும் பல் பராமரிப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு எவரெஸ்ட் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் முகைதீன் அப்துல்காதர் தலைமை தாங்கினார். முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் இசக்கிமுத்து வரவேற்றார். மருத்துவ முகாமில் டாக்டர்கள் லதா, நசுருதீன், கலந்தர் மஸ்தான், செய்யது முகமது தமீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர். சுப்பிரமணியன், அருள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் இசக்கி முத்து தலைமையில் துறைத்தலைவர்கள் வெங்கடாச்சலம், கஸ்தூரி, புஷ்பலதா, சங்கர்கணேஷ், கார்த்திகா மற்றும் விரிவுரையாளர்கள் சக்திவேல், மகாராஜன், பூவரசன், நிர்வாக அதிகாரி செய்யது அலி, மேலாளர் மகேஸ்வரன் செய்திருந்தனர்.