ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Update: 2023-06-21 18:58 GMT

சேலம் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. துணை கலெக்டர் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம், பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். இதில் முதுகலை ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு வகுப்பறை நிலைப்பாடு, பாடம் நடத்தும்போது மாணவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவது, நேர மேலாண்மை, பெற்றோர்கள், பொதுமக்களிடையே ஆசிரியர்கள் நட்புடன் பழகும் விதம், மாணவர்களை ஊக்குவித்தல், ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் இடையே உள்ள தனித்திறனை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற தலைப்புகளில் பயிற்சியாளர்கள் பர்கத் நிஷா, ஜெரூஸ் ஆல்பர்ட் பிரிட்டோ, ருத்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர். டாக்டர் ரங்கநாதன் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு ஆரோக்கியம் குறித்து எடுத்துரைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்