ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-09-19 18:45 GMT

தொண்டி,

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர், துணை தலைவர், செயலாளர்களுக்கான ஜல்ஜீவன் திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் முதல் கட்டமாக நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன் முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து குடியிருப்புகள், வீடுகளுக்கும் செயல்படும் தன்மையுடன் கூடிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், நீரின் ஆதாரங்களை வலுப்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, நீரின் தன்மையை பரிசோதித்தல், கிராம அளவில் தண்ணீர் தேவை தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்தல் குறித்து மாவட்ட வள பயிற்றுனர்கள் ஜெயபால், ராஜ தேன்மொழி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் திருவாடானை யூனியனை சேர்ந்த 16 ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர் களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்