விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

வேதக்கோட்டைவிளையில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-12-28 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மானிய விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேதகோட்டைவிளையில் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் பாரதி, தொழில்நுட்ப உரையும், வேளாண்மை அலுவலர் முத்துகுமார் வட்டார விரிவாக்க மையத்தின் திட்டங்கள் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர் சிலம்பரசன் பி.எம்.கிஸான், இ.கே.ஒய்.சி. பதிவிறக்கம், சொட்டுநீர் பாசனம் குறித்தும் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து உழவன் ஆப் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதில் ஆதியாக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ருக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் வெள்ளத்துரை, சபிதாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்