கோடைக்கால ஆக்கி பயிற்சி முகாம்

கோடைக்கால ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2023-05-18 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோடைக்கால ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிமாங்குடி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு சான்றிதழை மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கி எழுவர் ஆக்கி போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற வீரர்களை பாராட்டி பேசினார். விழாவில் பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி பேராசிரியை நாகேஸ்வரி, ஆக்கி யூனிட் ஆப் சிவகங்கை செயலர் தியாக பூமி, தலைவர் கார்த்திகை சாமி உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும் முகாம் ஒருங்கிணைப்பாளருமாகிய முத்து கண்ணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்