காளையார்கோவில்
வட்டார அளவிலான நீடித்த நிலைத்த இலக்குகளை அடைதல் மற்றும் உள்ளூர்மயமாக்கல் தொடர்பான பயிற்சி காளையார்கோவில், கண்ணங்குடி, தேவகோட்டை, கல்லல் ஆகிய வட்டாரங்களுக்கு காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் நீடித்த நிலையான இலக்குகள் குறித்தும், அதனை அடைதல், அதற்கான தரவுகள் தொடர்ந்து கணிணி மயமாக்குதல், பதிவேற்றம் செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. துறை வாரியாக இலக்குகள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் அனைத்துத்துறை சார்ந்த வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.