ெரயில்வே வாரியத்தின் அனுமதிகோரி பரிந்துரைக்கப்பட்ட ெரயில்களின் விவரம்

ெரயில்வே வாரியத்தின் அனுமதிகோரி பரிந்துரைக்கப்பட்ட ெரயில்களின் விவரம் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-07-05 19:07 GMT


தென்னக ெரயில்வேயில் நடப்பாண்டில் புதிதாக இயக்கப்பட உள்ள மற்றும் நீட்டிக்கப்பட ெரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட ெரயில்களின் விவரத்தை ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரையிலான வாரம் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை வாரம் இரு முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில், மங்களூரில் இருந்து ராமேசுவரம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில், மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில் நீட்டிப்பு சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில் (20601 மற்றும் 20602), போடி வரையிலும் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் (ெரயில்எண் 16328 மற்றும் 16327), ராமேசுவரம் வரையிலும் நெல்லை பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (ெரயில ்எண் 16791 மற்றும் 16792), தூத்துக்குடி வரையிலும் நீட்டிப்பு செய்ய அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுரையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில் குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயிலும் இணைக்கப்பட்டு குருவாயூரில் இருந்து மதுரை வரையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயிலாக இயக்க அனுமதிகோரி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேற்கண்டவாறு தென்னக ெரயில்வே நிர்வாகத்தின் பொது தகவல் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்