சீனாவில் நீச்சல் குளத்தில் குளித்தபோது பரிதாபம்: தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரத்தில் சிக்கி புதுக்கோட்டை மருத்துவ மாணவர் பலி

சீனாவில் நீச்சல் குளத்தில் குளித்தபோது தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரத்தில் சிக்கி புதுக்கோட்டை மருத்துவ மாணவர் பலியானார்.

Update: 2023-06-16 18:45 GMT

புதுக்கோட்டை காமராஜபுரம் 6-ம் வீதியை சேர்ந்த ரவி-விசாலாட்சி தம்பதியின் மகன் வைத்தியநாதன் (வயது 21). இவர் சீனாவில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள நீச்சல் குளத்தில் வைத்தியநாதன் மற்றும் அவரது நண்பர்கள் குளித்துள்ளனர்.அப்போது நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றும் எந்திரத்தை நீச்சல் குள நிர்வாகம் இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் வைத்தியநாதன் இழுத்து செல்லப்பட்டு அந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்த சக மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வைத்தியநாதனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைகேட்டு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் வைத்தியநாதனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்