சேலத்தில் பரிதாபம்:சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்த கர்ப்பிணி சாவு

சேலத்தில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த கர்ப்பிணி பலியானார்.;

Update: 2023-03-30 22:19 GMT

கர்ப்பிணி

சேலம் அம்மாபேட்டையை அடுத்த அதிகாரிபட்டி அருகே உள்ள உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் வாந்தி எடுத்து உள்ளார்.

அப்போது அவர் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் சந்தியாவை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்