செம்மண் கடத்தல்லாரி பறிமுதல்

விருத்தாசலத்தில் செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-10-15 19:25 GMT

விருத்தாசலம்,

கடலூர் புவியியல் மற்றும் சுரங்க துறை புவியியல் உதவி இயக்குனர் ஜீவா மற்றும் அதிகாரிகள் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் வேகமாக வந்த லாரியை அதிகாரிகள் மறித்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அதன் டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து லாரியை சோதனை செய்து பார்த்தபோது, அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாாிகள் அதனை கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாாின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்