உளுந்தூர்பேட்டை அருகேகஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.;
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமதி, மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமானன், ஜெகநாதன் உள்பட தனிப்படை போலீசார் புகைப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பஸ்சை நிறுத்தி, அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலை குண்டு பகுதியை சேர்ந்த சிலம்பு ராஜா (வயது 34) என்பவர் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் அளித்தகவலின் பேரில், திருச்சி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்குமார், அவரது கூட்டாளி மற்றொரு செந்தில்குமார் ஆகியோரையும் கைது செய்தனர்.