கூத்தாநல்லூர் பெரியக்கடைத்தெரு சாலையில் போக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூர் பெரியக்கடைத்தெரு சாலையில் போக்குவரத்து நெரிசல்;

Update: 2023-09-07 18:45 GMT

கூத்தாநல்லூர் பெரியக்கடைத்தெரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியக்கடைத்தெரு சாலை

கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் பெரியக்கடைத்தெரு சாலை உள்ளது. இந்த சாலை அமைந்துள்ள இடத்தில் கடைவீதி, மின்சார வாரியம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தபால் அலுவலகம், பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளன. அதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இந்த பெரியக்கடைத்தெரு சாலையில் மாலையில் பள்ளிகள் விடும் நேரத்தில் மாணவர்கள் சாலை வழியாக கடந்து செல்கின்றனர். அப்போது பொதுமக்களும் சென்று வருகின்றனர். அந்த நேரத்தில் சாலைகளிலேயே ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல்

இதனால் வாகனங்கள் எளிதாக சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனங்கள் ஆங்்காங்கே தாறுமாறாக செல்கின்றன. அந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் திடீரென சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

போக்குவரத்து நெரிசல், சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாலும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதாலும் ஏற்படுகின்றன. அதனால் பள்ளி விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்