போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

வலங்கைமான் கடைத்தெருவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். எனவே புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-08-02 22:20 IST

வலங்கைமான்;

வலங்கைமான் கடைத்தெருவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். எனவே புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலங்கைமான் கடைத்தெரு

கும்பகோணம்-மன்னார்குடி மெயின் ரோட்டில் வலங்கைமான் கடைத்தெரு அமைந்துள்ளது. இங்குள்ள சாைல ஒரு வழிபாதையாக உள்ளது. இந்த கடைத்தெரு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். அப்போது சாலையில் வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு வருபவர்கள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது.அந்த நேரம் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் அதற்கு வழிவிட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு வழிவிட முடியாமல் எதிரே வரும் வாகன்ங்கள் நீண்ட நேரம் அங்கிருந்து செல்லமுடியாமல் நிற்கின்றன.

புறவழிச்சாலை

எனவே வலங்கைமான் கடைத்தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்