போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நீடாமங்கலம் பகுதி மக்கள்

நீடாமங்கலம் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் அரை நூற்றாண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Update: 2022-10-06 18:30 GMT

நீடாமங்கலம் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் அரை நூற்றாண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ரெயில்வே மேம்பாலம்

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை டெல்டா மாவட்ட பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். ஒரு புறம் வயல், ஒரு புறம் ஆறு என இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், வாகன போக்குவரத்து சிக்கல் நிறைந்ததாக உள்ளது.

நெடுஞ்சாலையின் வழித்தடத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் நெடுஞ்சாலையின் குறுக்காக அமைந்துள்ளது. நாள்தோறும் பலமுறை ரெயில்வே கேட் மூடப்படுவதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் அரை நூற்றாண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சுற்றுச்சாலை திட்டம்

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் நீடாமங்கலம் சுற்றுச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு முதலில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்கு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டபணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சை வரையிலான பணிகள் முதலில் நிறவடைந்தது. தஞ்சை முதல் நாகை வரையிலான நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் தேக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை என கூறி தஞ்சை- நாகை நான்கு வழிச்சாலை திட்டம், இருவழிச்சாலை திட்டமாக மாற்றப்பட்டது. இதற்கான பணிகளும் தற்போது வரை முழுமையாக நிறைவேற்றப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

நிதி ஒதுக்கீடு

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து மண்பரிசோதனை செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறையால் திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக 2015-2016-ம் நிதியாண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது. இந்த திட்த்துக்கு ரூ.53 கோடியே 92 லட்சத்தை ரெயில்வே துறை தன்பங்கிற்கு செலவிட திட்டமிட்டு உள்ளது. திட்ட பணிகள் தொடங்காத காரணத்தால் ரெயில்வே துறை தனது பங்கிற்கான தொகையை விடுவிக்காமல் உள்ளது.

நம்பிக்கை

இந்த நிலையில் நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்ட பணிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் மூலம் நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமையும் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்