பள்ளம் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி

சீர்காழியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.;

Update: 2023-07-04 19:15 GMT

சீர்காழியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

புதைவட மின் கம்பி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்துக்கு புதைவட மின் கம்பி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ்இதையொட்டி சீர்காழி பிரதான சாலையில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, சாலையோரம் மண் கொட்டப்படுகிறது.

இதன் காரணமாக சாலை குறுகலாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்கு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெருக்கடி

இதேபோல சீர்காழி புறவழிச் சாலை அமைப்பதற்காக திருமுல்லை வாசலில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மண் ஏற்றி செல்வதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி, புறவழிச் சாலைக்கு கனரக வாகனங்களில் மண் ஏற்றி செல்லும் பணி ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்