சென்னை ஈ.வே.ரா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை ஈ.வே.ரா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.;
சென்னை,
சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈ.வெ.ரா. சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில் பர்னபி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்ரமித்து இன்று (3-ந் தேதி) இரவு 10 மணி முதல் 4-ந் தேதி காலை 5 மணி வரை பள்ளம் தோண்டி சாலையின் குற்ககே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா சாலையில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பை நோக்கி நேராக செல்லலாம். ஈ.வெ.ரா சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.
அந்த வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் பர்னபி சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி பர்னபி சாலை, பொன்னியம்மன் கோவில் சந்திப்பு, வலது புறம் திரும்பி பிளவர்ஸ் சாலை மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.