மெட்ரோ ரெயில் பணி காரணமாக போரூரில் போக்குவரத்து மாற்றம்...!

மெட்ரோ ரெயில் பணி காரணமாக போரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-05 16:26 GMT

போரூர்,

மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி போரூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை, சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணி நடைபெற்று வருவதால் போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போதுள்ள போக்குவரத்து முறையில் 05.02.2023 முதல் 07.02.2023 வரை சோதனை ஓட்டமாக கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

1. போரூர் மேம்பால சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலை மூடப்படவுள்ளது. எனவே, குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்ப இயலாது. இவ்வாகனங்கள் வலது புறம் திரும்பி கிண்டி மார்க்கமாக செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை - இராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் " யூ டர்ன்" எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.

2) குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பால சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் குன்றத்தூர் மெயின் ரோடு - பாய் கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மாங்காடு சாலை வழியாக பூந்தமல்லி செல்லவும்.

3) குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் இரு சக்கர வாகனங்கள். போரூர் சந்திப்பிற்கு முன்பாக குன்றத்தூர் மெயின் ரோடு - மசூதி தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மசூதி தெரு வழியாக சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

(4) வடபழனி மார்க்கத்திலிருந்து ஆற்காடு சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை - இலட்சுமி நகர் 40 அடி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடைந்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

5) ஆற்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் போருர் மேம்பாலம் சந்திப்பில் வலது புறம் திரும்பி பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே வாகனங்கள் இடது புறம் திரும்பி கிண்டி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை - இராமகிருஷ்ணன் சாலை சந்திப்பில் "யூ டர்ன்" எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக செல்லலாம்.

6) வாகனங்கள் கிண்டி மார்க்கத்திலிருந்து மவண்ட் பூந்தமல்லி சாலை வழியாக வந்து போரூர் மேம்பாலம் சர்விஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே இவ்வாகனங்கள் போருர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

7) பூந்தமல்லி மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக வந்து "யூ டர்ன்" எடுத்து மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே இவ்வாகனங்கள் நேராக சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை - இராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் "யூ டர்ன்" எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்