மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

விக்கிரசிங்கபுரத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-11-05 19:12 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் பெய்த மழை காரணமாக மெயின் ரோடு பெட்ரோல் பல்க் அருகே உள்ள பழமைவாய்ந்த மருத மரம் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சார கம்பியின் மேல் விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்புத் துறை அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் அருணாசலம், பூதப்பாண்டி, கோபால குமரேசன், பன்னீர்செல்வன், முருகமணி, ஜான்வினி‌ஸ்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மரக்கிளைகளை வெட்டி அகற்றினார்கள். தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மின்சாரமும் அப்பகுதியில் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்