பாரம்பரிய இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

மயிலாடுதுறையில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-09-16 19:15 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய இயற்கை அங்கக வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். வேளாண் துணை இயக்குநர் மதியரசன், தோட்டக்கலைத்துறை மற்றும் விதைச்சான்று துறை அலுவலர் கனகம் ஆகியோர் வேளாண் தொழில்நுட்ப விளக்கம் குறித்து பேசினர். மேலும் இயற்கை வேளாண்மையின் பயன், சந்தைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நடந்தது. பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் அறுவடை அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்