அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த உடன்குடி புதிய வாரச்சந்தையில் திங்கட்கிழமைவியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த உடன்குடி புதிய வாரச்சந்தையில் திங்கட்கிழமைவியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி:
அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த உடன்குடி புதிய வாரச்சந்தையில் நாளை மறுநாள்( திங்கட்கிழமை) வியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.1.98 கோடியில் வாரச்சந்தை
உடன்குடி மெயின்பஜார் 4 சந்திப்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கட்கிழமை தோறும் செயல்படும் வார சந்தை வளாகம் உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த இந்த வாரச்சந்தை ரூ.1.98 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
வாரசந்தை வளாகம் முழுமையாக மராமத்து செய்யப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டதுடன், அடிப்படை வசதிகளும் ெசய்யப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தை வளாகத்தை கடந்த வாரம் திருச்செந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார்.
போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையில் வாரச்சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரிகள், சந்தை கட்டும் பணி தொடங்கி நாள் முதல், கடந்த வாரம் வரை, உடன்குடி பஜார் ரோட்டில் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் உடன்குடியில் வாரச்சந்தை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளைமறுநாள்(திங்கட்கிழமை) வாரச்சந்தை கூட உள்ளது. இந்த வாரச்சந்தையை புதிய வளாகத்திலுள்ள கடைகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
வியாபாரிகள் கோரிக்கை
ஏற்கனவே, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை ஒட்டி உடன்குடி பஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாளைமறுநாள் மீண்டும் சாலையோரத்தில் வாரச்சந்தை நடந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு புதிய வாரச்சந்தை வளாகத்தில் நாளைமறுநாள் வியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.