லாரி மோதி வியாபாரி பலி

தூசி அருகே லாரி மோதி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-12-29 16:00 GMT

தூசி

காஞ்சீபுரம் டவுன் செட்டிகுளம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 38). இவர் காஞ்சீபுரம் அருகில் பீரோ கடை வைத்து இருந்தார்.

இவர் நேற்று மாலை உறவினர் வீட்டில் இரங்கல் நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் செய்யாறு சென்று கொண்டிருந்தார். தூசி அருகே பாண்டியம்பாக்கம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் மலர்வண்ணன் கீழே விழுந்தார். அப்போது லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து லாரியை அங்கே விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்