விபத்தில் வியாபாரி சாவு

விபத்தில் வியாபாரி இறந்தாா்.

Update: 2023-09-10 21:59 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உக்கரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 50). கீரை வியாபாரி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளில் செல்லம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அசோக்குமாரின் மோட்டார்சைக்கிளும், எதிரே குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி (50), குப்பந்துரை பகுதியை சேர்ந்த மயில்சாமி (40) ஆகியோர் வந்த மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அசோக்குமார் இறந்தார்.

படுகாயம் அடைந்த பொன்னுசாமி, மயில்சாமி ஆகியோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசோக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்